inner slider

பயிற்சிகள் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்இ சாரதிகள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கு வெவ்வேறாக நடத்தப்படுகின்றன. சாரதிகளுக்கு நடத்தப்படுகின்ற பயிற்சி தற்கால நடைமுறைக்கு மிகவூம் உகந்ததாக இருப்பதுடன் இந்தப் பயிற்சி கோட்பாடு மற்றும் செயல்முறை என இரண்டு பிரிவூளைக் கொண்டதாகும்.

இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நெறிப்படுத்துவதன் மூலம் பின்வரும் இலக்குகளை ப+ர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

  • சிறந்த நிருவாகத்தின் ஊடாக அரச நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் சிறந்த பொதுமக்கள் தொடர்புகளை கட்டியெழுப்புதல்.
  • பாராளுமன்ற நடைமுறைகள் பல்வேறுபட்ட பாராளுமன்றக் குழுக்கள் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்புகள் பற்றி அவர்களுக்கு விளக்கமளித்தல்.
  • சிறந்த பொதுமக்கள் தொடர்புகள் மற்றும் அலுவலக நடைமுறைத் திட்டங்களுடன் ஆக்கத்திறன் வாய்ந்த எண்ணக்கருத்துக்களைப் பயன்படுத்தி முறையான அலுவலக முறையொன்றைப் பேணுவதன் ஊடாக பொதுமக்களுக்கு ஆக்கத்திறன் வாய்ந்த வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்குவதற்கு அவர்களுக்கு ஆற்றலை வழங்குவதன் மூலம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  • பன்முகப்படுத்தப்பட்ட வரவூ செலவூ முகாமைத்துவத்துக்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குதல்.
  • இந்த அமைச்சுடன் அவர்களது பணிகளுடன் சேர்ந்து சிறந்த தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியணிக்கு வழிகாட்டுதல்.
  • பதவியணிக்கு உரித்தான சம்பளங்கள்இ படிகள்இ முற்பணங்கள்இ பணிக்கொடைகள் சம்பந்தமாக அவர்களுக்கு விளக்கமளித்தல்.
  • அலுவலக உபகரணங்களைப் பராமரித்தல் மற்றும் பேணுவது தொடர்பில் விளக்கமளித்தல்.
  • கௌரவ உறுப்பினர்களுக்கு ஏதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வருகை தருகின்ற பொது மக்களுக்கு முறையானவாறு தொடர்புபடுத்துவதற்காக மாகாண மட்டத்திலும்இ மாவட்ட மட்டத்திலும் மற்றும் பிரதேச மட்டத்திலும் உள்ள அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டுள்ள வெளிக்கள உத்தியோகத்தர்களின் பணிகள்

இந்த இலக்குகளை அடைந்து கொள்ளுவதற்காக பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பின்வரும் துறைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

  • அலுவலக முறைஇ தொடர்பாடல் மற்றும் பொதுமக்கள் தொடர்புகள்
  • சிறந்த நிருவாகம
  • பாராளுமன்றப் பொறுப்புகள்இ சட்டம் மற்றும் ஆலோசனைகள் அத்துடன் நிலையியற் கட்டளைகள்
  • அமைச்சுக்களின் தாபிப்புகளும் உறுப்பினர்களின் சிறப்புரிமைகளும்.
  • பன்முகப்படுத்தப்பட்ட வரவூ செலவூ முகாமைத்துவம்.
  • அமைச்சுக்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள் (நிருவாகப் பிரிவூஇ வழங்கல் பிரிவூஇ நிதிப் பிரிவூ)
  • சுய ஒழுக்கக்கட்டுப்பாடு

சாரதி பயிற்சி
தற்பொழுது கூடுதலாகக் காணப்படுகின்ற வாகன விபத்துக்களைக் குறைத்துக் கொள்ளுவதற்காக இந்தப் பயிற்சி இரண்டு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டு நடத்தப்படுகின்றது.


செயல்முறைப் பயிற்சி

  • அவதானமாக வாகனத்தை ஓட்டுதல்.
  • புதிய மோட்டார் வாகனத் தொழில்நுட்பம்
  • வாகனத்தை ஓட்டும் போது தவறான பயன்பாடுகளைத் தவிர்த்தல்.
  • வாகனத்தை உரிய நேரத்தில் அதற்கான பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் முக்கியத்தும்.
  • புதிய ரக மோட்டார் வாகன உதிரிப்பாகங்களை முறையானவாறு பயன்படுத்தல்.
  • வாகனத்தின் பற்றறியின் உச்ச ஆயூட்காலத்தைப் பெற்றுக் கொள்ளல்.
  • நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளைச் செய்தல்.


கோட்பாட்டுப் பயிற்சி

  • பாதுகாப்புடன் வாகனத்தை ஓட்டுதல்.
  • வீதிச் சட்டங்கள்
  • சமிக்ஞை மற்றும் வேக எல்லைக்கு உட்பட்டு வாகனத்தை ஓட்டுதல்.
  • வீதிச் சட்டத்தை மீறுவதன் மூலம் ஏற்படக் கூடிய சிறிய ஃகடுமையான தண்டனைகள்
  • அரச வாகனங்கள் மற்றும் உத்தியோகப+ர்வ வாகனங்களைப் பயன்படுத்தும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்.
  • சாரதியின் பொறுப்புகளும் ஒழுக்க நெறிகளும்.
  • எண்ணக்கருத்துக்களை மேம்படுத்தல்.