கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை வினைத்திறன் மற்றும் உற்பத்தித்திறன் வாய்ந்ததாக நிறைவேற்றுவதற்கு பின்வரும் பதவியணி வழங்கப்பட்டுள்ளது.
பதவி எண்ணிக்கை - 06
- ஆராய்ச்சி உத்தியோகத்தர்- 01
- செயலாளர் - 01
- தட்டெழுத்தாளர- 01
- அலுவலகப் பணியாளர- 01
- சாரதி- 02
நியமனத்தின் தன்மை
- தற்காலிக நியமனமாகும்.
- ஓய்வ+தியம் உரித்தன்று.
- கௌரவ உறுப்பினர்களின் உத்தியோகப+ர்வ காலப்பகுதி செல்லுபடியாகும் வரைக்கும் அல்லது உறுப்பினரின் தற்றுணிபின் பிரகாரம் சேவையை முடிவூறுத்தும் வரைக்கும் இந்தப் பதவி செயல்வலுவில் இருக்கும்.
- இந்தப் பதவிக்கான நியமனம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் சிபாரிசின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.
- அரசாங்க சேவை ஃ மாகாண அரச சேவை ஃ கூட்டுத்தாபன மற்றும் வெளி விண்ணப்பதார்களைக் கொண்டு இந்த ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும்.
- ஆராய்ச்சி உத்தியோகத்தர் பதவிக்காக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து பெற்றுக் கொண்ட பட்டப்படிப்பு இருத்தல் வேண்டும்.
- சாரதி பதவிக்காக சாரதி அனுமதிப்பத்திரம் இருத்தல் வேண்டும்.
சம்பளம்
- அரச அல்லது பகுதியளவூ அரச சார்ந்த சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர் ஒருவர் இந்தப் பதவியணிக்கு நியமிக்கப்படுமிடத்து அவரது நிரந்தரப் பதவிக்கு உரித்தான சம்பளம் அல்லது இந்தப் பதவியணிக்கு உரிய சம்பளம் இந்த இரண்டில் அதிகரித்த சம்பளத்துக்கு உரித்துண்டு.
- அரசாங்க சேவையில் ஃ மாகாண அரச சேவையில் ஃ கூட்டுத்தாபனத்தில் இருந்து ஊழியரை விடுவித்து பதவியணியில் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டிருப்பின் அவர்களது சம்பளத்தை உரிய நிறுவனங்களுக்கு மீளளிக்கப்படும்.
- சம்பளத்தை மீளளிப்பதற்காக நிரந்த சேவை நிலையத்தில் இருந்து செலுத்தப்படுகின்ற சம்பள அறிக்கையை மாதாந்தம் பெற்றுக் கொள்ளப்படும்.
- சம்பளத்தை மீளளிக்கும் போது நிரந்தர சேவை நிலையத்தில் இருந்து செலுத்தப்படுகின்ற அடிப்படைச் சம்பளம்இ விசேட படிஇ இடைக்காலப் படிஇ நுPகுஇ நுவூகு மாத்திரம் இந்த அமைச்சினால் செலுத்தப்படும்.
- போக்குவரத்துச் செலவூஇ இணைந்த படிஇ மேலதிக நேரப்படிஇ மிகைய+தியம்இகாப்புறுதி போன்றன செலுத்தப்பட மாட்டாது.
- வெளியில் இருந்து ஆட்சேர்ப்புச் செய்யப்படுகின்றவர்களுக்கு இந்த அமைச்சிலிருந்து சம்பளம் வழங்கப்படும
படிகள்
- கௌரவ உறுப்பினர் சிபாரிசு செய்கின்ற பதவியணியின் ஒருவருக்கு மாத்திரம் 400.00 ரூபா மாதாந்த போக்குவரத்து செலவூப்படி வழங்கப்படும்.
- சிங்களஇதமிழ் புதுவருடம்இ நத்தார்இ ராமஸான் போன்ற தேசிய மத வைபவங்களுக்காக சம்பளத்தில் இருந்து மாதாந்தம் மீள அறவிட்டுக் கொள்ளும் அடிப்படையில்10இ000.00 ரூபா விழா முற்பணம் வழங்கப்படும்.
- 06 மாத கால சேவைக் காலத்தைப் ப+ர்த்தி செய்தவர்களுக்கு சேவை முடிவூறுத்தப்படும் போது பணிக்கொடையொன்று வழங்கப்படும். இது அடிப்படைச் சம்பளத்தின் 20மூ ஆகும் என்பதுடன் கடமை புரிந்த மாதங்கள் கணக்கிடப்பட்டு அதற்கமைவாக வழங்கப்படும்.
- அரசாங்க சேவையில் இருந்து விடுவிக்கப்படுபவர்களுக்கு இந்தப் படி உரித்துடையதாகாது.
சேவைகள்
உறுப்பினர் பதவியணி தாபனப் பிரிவூ
- உறுப்பினர் பதவியணி நியமனங்களும் சேவையை முடிவூறுத்துதலும்.
- உறுப்பினர் பதவியணிக்கு நியமிப்பதற்கு பிரேரரிக்கின்ற அரச ஊழியர்களை விடுவித்தல்இ தற்காலிகமாக இணைத்துக் கொள்ளல் மற்றும் அவர்களது சம்பளங்களை மீளளித்தல்.
- அரச ஊழியர்களுக்கான செயலாற்றுகை மதிப்பீட்டு அறிக்கையைக் கோருதல் மற்றும் நிரந்தர சேவை நிலையங்களுக்கு அவற்றை அனுப்பி வைத்தல் (ஆராய்ச்சி உத்தியோகத்தர்களுக்காக)
- வருடாந்த சம்பள ஏற்றக் கட்டளையை அங்கீகரிப்பித்;துக் கொள்ளல்.
- அடையாள அட்டையைத் தயாரித்தல்.
- உறுப்பினர் பதவியணிக்கு உரியதான அமைச்சரவைப் பத்திரம் தொடர்பிலான பணிகள்
- உறுப்பினர் பதவியணி பயிற்சி நடவடிக்கைகள்