North Western Province
Wayamba Training Institute,
Wariyapola
2017-09-14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்கள் ஊவா மாகாணத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியணி உத்தியோகத்தர்களுக்காக பெல்கஹதென்னஇ ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில் மிகவூம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதற்காக பதவியணியின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்இ செயலாளர்கள்இ தட்டெழுத்தாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கமானது சிறந்த சமூக சேவைகளை வழங்குதல் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை முறையானவாறு பயன்படுத்துதல் சம்பந்தமாக விளக்கமளிப்பதாகும்.
2017-07-15 ஆநத் திகதி பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகள் மற்றும் குழுக்கள் பற்றி ஊவா மாகாணத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று பெல்கஹதென்னஇ ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த செயலமர்வூக்கு பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின்இ மொணறாகல மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின்இ ஊவா மாகாண சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊவா மாகாணத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 8 வது பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்இ குழுக்கள் மற்றும் விசேட குழுக்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்தல்; இந்த செலமர்வின் அடிப்படை நோக்கமாக இருந்தது.