inner slider

2017-09-14 மற்றும் 15 ஆகிய இரண்டு தினங்கள் ஊவா மாகாணத்தின் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியணி உத்தியோகத்தர்களுக்காக பெல்கஹதென்னஇ ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில் மிகவூம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதற்காக பதவியணியின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள்இ செயலாளர்கள்இ தட்டெழுத்தாளர்கள் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் பிரதான நோக்கமானது சிறந்த சமூக சேவைகளை வழங்குதல் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை முறையானவாறு பயன்படுத்துதல் சம்பந்தமாக விளக்கமளிப்பதாகும்.

2017-07-15 ஆநத் திகதி பாராளுமன்ற சட்ட ஏற்பாடுகள் மற்றும் குழுக்கள் பற்றி ஊவா மாகாணத்தின் பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வொன்று பெல்கஹதென்னஇ ஊவா முகாமைத்துவ அபிவிருத்தி நிறுவனத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த செயலமர்வூக்கு பதுளை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின்இ மொணறாகல மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலகங்களின்இ ஊவா மாகாண சபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊவா மாகாணத்தின் கௌரவ உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 8 வது பாராளுமன்றத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்கள்இ குழுக்கள் மற்றும் விசேட குழுக்களின் செயற்பாடுகள் பற்றி விளக்கமளித்தல்; இந்த செலமர்வின் அடிப்படை நோக்கமாக இருந்தது.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்காக தமிழ் மொழிமூல பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்று 2017-08-24 மற்றும் 25 ஆகிய இரண்டு தினங்கள் பத்தரமுல்லஇ பெலவத்த வீடமைப்புத் திட்ட கட்டட நிலையத்தில் (ஊடீ) நடத்தப்பட்டது.

சாரதிகளின் எண்ண விருத்தி மற்றும் நவீன வாகனங்கள் அத்துடன் நவீன வாகனங்களின் உதிரிப்பாகங்கள் பற்றிய விளக்கங்களை வழங்குதல் இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும்.

வெற்றிகரமான முறையில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்துக்காக யாழ்ப்பாணம்இ திகாமடுல்லஇ வவூனியாஇ மட்டக்களப்புஇ திருகோணமலைஇ நுவரெலியாஇ கண்டிஇ பதுளை மற்றும் கொழும்பு மாவட்டங்களின் மற்றும் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களின் தமிழ் மொழிமூல சாரதிகள் இதில் கலந்து கொண்டனர். இந்தப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்துக்கு சிறந்த வரவேற்பு காணப்பட்டதுடன் இப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டம் மிக வெற்றிகரமானவாறு நிறைவடைந்தது.